பக்கம்:திரு அம்மானை.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழும்பில் ஈடுபடுத்தியவன் 117

கவலையோ நினைவோ அன்பர்களுக்கு இருப்பதில்லை. அவர்களுக்கு இந்த ஊனைப்பற்றிய எண்ணமே மறந்து போகிறது. அப்படி இறைவன் உருக்கி விடுகிறான். .

பொன்னை உருக்கினால் அதில் உள்ள மாசுகள் பிரிந்து விடும். இறைவன் -, உ.ட விடங்கொண்டு அதை உருக்கி . விடுவதனால் இந்த உடம்பை எடுப்பதற்குக் காரணமாக வுள்ள வினைகள் நீங்கி விடுகின்றன. அவனருளால் . வினைப் பிறவி சாராத நிலை வந்து விடுகிறது. தன் அன்பர்களின் வீனையை ஓட்டுவதனால் அவர்களுக்கு உண்டாகும் - உக்ப்பைவிட இறைவனுக்கே மிகுதியான உகப்பு உண்டா கிறது. வயிறு நிரம்ப உண்ட குழந்தைக்குப் பசி நீங்கி மகிழ்ச்சி உண்டாகும் போது அதற்கு உணவை ஊட்டிய அன்னை மகிழ்ச்சியடைவது போல, இறைவன் தன் அடியார் களின் வினைகளை ஓட்டி அதனால் உகப்பை அடைகிறான். ஊனையும் நின்று உருக்கி என் வினையை ஓட்டுகந்து. , ' .

அவ்வாறு உடலை உருக்கின பிறகு அவன் தன் அருளை அந்த ஆன்மாவில் பதிக்கிறான். அப்போது என்றும் அடையாத ஆனந்தத்தை ஆன்மா அடை கிறது. உயர்ந்த பக்குவம் அடைந்த ஆன்மா இறைவன் - அருளைப் பெற்று அதிக முயற்சி இல்லாமலே ஆனந்தத்தை - அடைகிறது. தேனை உண்டாற்போன்ற களிப்பு உண்டா - -சற்றே பக்குவம் குறைந்த ஆன்மாக்களுக்குச் சிறிது வருத்தத்தை உண்டாக்கி - அருளின்பத்தை - இறைவன் வழங்குகிறான், பாலைக் காய்ச்சிச் சர்க்கரை போட்டு ஆற்றி உண்ணச் செய்வது போல அவர்களுக்குச் சிறிது வருத்தத்தைத் தந்து அவன் அருளின்பத்தைப் பாய்ச்சு கிறான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/131&oldid=1418521" இலிருந்து மீள்விக்கப்பட்டது