பக்கம்:திரு அம்மானை.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அம்மானை -

பின்னும் பக்குவம் குறைந்தவர்களுக்கு அதிகமான முயற்சியை மேற்கொள்ளச்செய்து, அல்லலுழந்து எய்த்துப் பின்பு அருளின்பம் பெற வழிசெய்கிறான். கரும்பைப் பிழிந்து சாற்றை நுகரச் செய்வது போன்றது அது. இவ்வாறு - - உத்தம அதிகாரிகளுக்குத் தேனைப் போலவும், மத்திம அதிகாரிகளுக்குப் பாலைப் போலவும், அதம அதிகாரிகளுக்குக் கரும்பைப் போலவும் இருந்து இன்பம் வழங்குகிறான்.. மூவகையினருக்கும். இன்பம் வழங்கினாலும் அப்படி வழங்கும் முறையில் வேறுபாடு இருக்கிறது. அது அவர்களுடைய தகுதியைப் பொறுத்தது. ஆனால் முடிவில் யாவர்க்கும் அருளின்பம் நுகரும் இனிமை கிடைக்கிறது. இவர்கள் மூவகையினரும் இறைவனுடைய அருளைப் பெறுகிறார்கள். பெறும் முறை வேறு பட்டாலும் முடிவில் உண்டாகும் அனுபவம் ஒன்று தான். அவ்வாறு அருள் செய்யும் தலைவனாக அவன் எழுந்தருளிகிறான். தேனையும் பாலையும் கள்னலையும் ஒத்து இனிய கோனவன் போல் வந்து, ' இனியவனாகத் தலைவனாக அவன் எழுந்தருளி வந்து ஆட்கொள்கிறான். அதன் பின் அன்பர்கள் வேறு எதனையும் செய்யாமல் அவனுடைய தொண்டிலே ஈடுபட்டு நிற்கிறார்கள், அவன் - அவர்களை அவ்வாறு நிலையாக நிற்கும்படி தன் தொழும்பில் ஈடுபடுத்திக் கொண்டருளுகிறான். ' இனிய கோனவன் போல் வந்து என்னைத் . தன் தொழும்பில் கொண்டருளும் வானவன். பொறிகளுக்கு எட்டாத இறைவன் கண்ணுக்கும் கருத்துக்கும் இனிய குருநாதனாக எழுந்தருளித் தானே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/132&oldid=1418522" இலிருந்து மீள்விக்கப்பட்டது