பக்கம்:திரு அம்மானை.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழும்பில் ஈடுபடுத்தியவன் 119


அன்பர்களை நாடி வந்து, என்றும் மீளா ஆளாக அவர்களை அமைத்துக் கொள்கிறான். அவன் தன் கருணையினால் ஆட்கொள்ளும் வித்தகம் இது. அத்தகைய பெருமான் தன் பொலிவு பெற்ற தாமரை போன்ற திருவடியைக் காட்டி அன்பர்களை அடித் தொழும்பில் ஈடுபடுத்தி விடுகிறான். தேவாதி தேவனாகிய அவன் அன்பர்கள் இருக்கும் இடத்துக்கே எழுந்தருளி - வந்து தன் அருளில் அவர்களைப் பதியச் செய்கிறான். குழந்தை விளையாடிக் கொண்டிருந்தாலும் அவ்விடத்தே சென்று சோற்றை ஊட்டும் தாயின் கருணை போன்றது இது. அவர்கள் : உணவை நாடி வரட்டும் என்று காத்திராமல், குழந்தைக்குப் பசிக்குமே என்ற எண்ணத் தால் வலியச் சென்று ஊட்டுகிறாள் தாய், இறைவனும் அடியார்களை நாடிச் சென்று தன் அருளை வழங்குகிறான் - அந்த அருளைப் பெற்ற பிறகு அன்பர்கள் வேறொரு செயலும் இன்றி, அவனை நினைப்பதும், அவன் புகழைப் பாடுவதும், காசரணாதி அவயவங்களை அவன் தொண்டிலே ஈடுபடுத்துவதுமாக இருக்கிறார்கள். ' அத்தகைய மகாதேவனை நாம் பாடுவோம் என்கிறாள் மணிவாசக நாயகி. - ஆனையாய்க் கீடமாய் மானிடராய்த் தேவராய் - ஏனைப் பிற வாய்ப் பிறந்து இறந்து எய்த்தேனை . . ஊனையும் நின்று உருக்கி என் வினையை ஓட்டுகந்து தேனையும் பாலையும் கன்னலையும் ஒத்து இனிய '. கோனவன் போல் வந்து என்னைத் தன்தொழும்பில் - கொண்டருளும் : வானவன் பூங்கழலே பாடுதுங்காண் அம்மானாய், * அம்மானை ஆடும் பெண்ணே , ஆனையாகவும் புழுவாகவும், மானிடராகவும், தேவராகவும், இவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/133&oldid=1418523" இலிருந்து மீள்விக்கப்பட்டது