பக்கம்:திரு அம்மானை.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 திரு அம்மானை யல்லாத மற்றப் பிறவிகளாகவும் பிறந்து பின்பு இறந்து இளைப்புற்ற அடியேனை, கண்ணுக்கும் கருத்துக்கும் இனிய குருநாதனைப் போல எழுந்தருளி வந்து என் உள்ளத்தை உருக்கியதோடு உடம்பையும் இதன் பால் இடங்கொண்டு நின்று உருகச் செய்து, பிறப்புக்குக் காரணமான என் வினைகளை ஒட்டு தலைத் திருவுள்ளத்தில் உகப்பாகக் கொண்டு, தேனைப் போலவும் பாலைப் போலவும், கரும்பைப்போலவும் இருந்து என்னைத் தன்னுடைய தொண்டில் ஈடுபடுத்திக் கொண்டருளும் தேவாதி தேவ னாகிய இறைவனுடைய தாமரைமலரைப் போன்ற திருவடி யையே நாம் பாடுவோம். (ஆனை, கீடம் என்பன - தாழ்ந்த பிறவிகளுக்கு மேலெல்லையும் இழல்லேயும் .ஆவன. 'மானிடர், தேவர் என்பன உயர்ந்த பிறவிகளுக்கு எல்லையாக உள்ளவை. பிறப்பு இறப்பு என்பவை துன்பம் தருவதால் பக்குவ ஆன் மாக்களுக்கு அவை அலுப்பைத் தருகின் றன, ஊனையும் என்ற உம்மை எச்சவும்மை; உள்ளத்தை உருக்கியதோடு ஊனையும் உருக்கினான் என்றபடி; “உடலிடம் கொண் டாய்" என்றபடி இவ்வூனில் நின்று உருக்கினானாம், என் வினை-யான் செய்த வினைகளை. வினைகள் தீர்ந்தாலன்றி இன்பம் வாராமையின் அவற்றை முதலில் ஓட்டினான். ஓட்டுகந்து ஓட்டுதலை - உகந்து; ஓட்டு- ஓட்டுதல்; . முதல் நிலைத் தொழிற்பெயர். ஓட்ட உகந்து ' என்பவற்றின் விகாரம் எனலும் ஆம், தேன், பால், கன்னல் என்பன மூவகை அதிகாரிகளுக்கு அருளும் வகையைக் குறித்தன. இனிய 'கோன் என்றது குருவை, கோனவன்: அவன், பகுதிப்பொருள் விகுதி. என்னை - ஒரு முயற்சியும் செய்யா திருந்த அடியேனை, தன் தொழும்பில் கொண்டு தன் தொண்டிலே ஈடுபடுத்திக் கொண்டு: தொழும்பு என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/134&oldid=1418525" இலிருந்து மீள்விக்கப்பட்டது