பக்கம்:திரு அம்மானை.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தக்கயாக சங்காரம்

தக்கன்றன் வேள்வியினில் இந்திரனைத் தோள் நெரித்திட்டு. - யக்ஞத்துக்கு எஜமானனாக இருந்த தக்கனுடைய தலையை அரிந்து யாககுண்டத்தில் இட்டான். பிற பொருள் களை அவியாக இடும் அந்த அக்கினியில் தக்கனுடைய தலையையே அறிந்து போட்டான். என்னைத் தடுப்பவர் யார்' . என்று தருக்கி நின்ற தலை தீக்கு இரையாகியது. எச்சன் தலை அரிந்து. வானத்தில் உலாவும் கிரணங்கள் விரிந்த சூரியனுடைய பல்லைத் தகர்த்தான். பற்கள் உதிர்ந்தன; அவன் பல் இல் லாதவன் ஆனான். : - அந்தரமே செல்லும் அலர் கதிரோன் பல்தகர்த்துச் சிந்தி. சூரியன் பல் இல்லாதவன் என்ற காரணத்தினால் மக்ர: சங்கராந்தியில் அவனுக்குப் பூஜை செய்யும் போது கடித்து உண்ணாமல் விழுங்கும் பொங்கல் முதலியவற்றை நைவேத் தியம் செய்வது வழக்கம். - தேவர்கள் அஞ்சி நடுங்கி ஓட்டம் எடுத்தார்கள். திசைக்கு ஒருவராக ஓடினார்கள். அவர்கள் அவ்வாறு ஓடு வதைக் கண்டு பெருமான் திருவுள்ளம் மகிழ்ந்தான். தேவர் களுக்கெல்லாம் தலைவன் சிவபெருமான்; "தேவர்கோ அறி . யாத தேவ தேவன்" என்பது மணிவாசகர் திருவாக்கு. அப் பெருமானை அழைக்காமல் செய்த வேள்வியில், தலை இருக்க வால் ஆடியது. போலத் தேவர்கள் அவியுண்டு களித்தார்கள். ஆகவே, அவர்களை அடித்து ஓட்டினான். * திசை திசையே தேவர்களை ஓட்டுகந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/137&oldid=1418527" இலிருந்து மீள்விக்கப்பட்டது