பக்கம்:திரு அம்மானை.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வானோர் அறியா வழி - 120 "வானின் றிழிந்து வரம்பிகந்த. . - மாபூ தத்தின் வைப்பெங்கும் ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறத்தும் உளன் என்ப. . என்று பாடினார். ஊன் புறத்தே தோன்றுவது; உயீர் அகத்தே உள்ளது; உணர்வு அகத்தே தோன்றிப் புறத்தே மெய்ப்பாடுகளால் புலப்படுவது. - - - : அவ்வாறு இறைவன் கலந்து ஒன்றி நின்ற போது இன்பம் உண்டாகிறது. அந்த இன்பம் எப்படி இருக்கிறது. எந்தப் பொறியின் இனிய அனுபவத்தையும் நாச்சுவைக் குரிய பொருளை - உவமையாக வைத்துச் சொல்வது வழக்கம். உண்ணும் உணவுக்குத் தேனையும் அமுதையும் உவமையாகச் சொல்வது இயல்பான பொருத்தம் உடையது. கண்ணால் காணும் குழந்தையை, கட்டிக் கரும்பே' என்றும், காதால் நுகரும் ' இசையை, 'தேன் - இசை' என்றும் சொல்வதால் இதை உணர்ந்து கொள்ளலாம். தாம் பெற்ற ஆனந்த அனுபவத்தை அத்தகைய உவமைகளால் விளக்க முற்படுகிறார் மணிவாசகர். இறைவன் உடம்பெல்லாம் இனிமை ததும்ப உட்கலந் தான்; தேனைப் போன்ற இனிமை அது. வருத்தம் சிறிது மின்றித் தேனைப் பருகிக் களிக்கலாம். “எனக்கு யாதொரு .' வருத்தமுமின்றி எளிவந்து இன்பத்தை நுகரச் செய்தான்" . என்பதைப் புலப்படுத்தத் தேனாய் என்றார். தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய். இறைவன் உட்கலந்ததனால் மரணமிலாப் பெருவாழ்வு கிடைத்தது. அதனால் அமுதமுமாய் என்றார். தேவர்கள் உண்ட அமுதம் உண்மையில் சாவை நீக்கவில்லை. "விண் னோர் அமுதுண்டும் சாவ” என்பது சிலப்பதிகாரம். இரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/143&oldid=1418545" இலிருந்து மீள்விக்கப்பட்டது