பக்கம்:திரு அம்மானை.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

181 வானோர் அறியர் வழி வானோர் அறியா வழி எமக்குத் தந்தருளும். இறைவனுடை இறைவனுடைய அடையாள மாலை கொன்றை, அது வேறு யாரும் அணியாத சிறப்பை உடையது. பிறரெல்லாம் மணமும் வடிவும் வண்ணமும் உடைய வேறு மலர்களை அணியும்படி அருள் புரிந்து, யாரும் அணியாத கொன்றை மாலையை அவன் அணிந்திருக்கிறான். அது அவனுக்கே உரிய மாலையாக விளங்குகிறது. கொன்றை வேய்ந்த செல்வன் என்று சொன்னாலே போதும்; சிவபெருமான் என்று அறிந்து கொள்ளலாம். அவன் வீரம் பொருந் தியவன், தேனார் மலர்க் கொன்றைச் சேவகனார். அவன் அணிந்த கொன்றை மாலையை, 4 கார்விரி கொன்றைப் பொன்நேர் புதுமலர்த் 'தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்” என்று அகநானூற்றுப் பாடல் வருணிக்கிறது. இறைவனைச் சேவகனார் என்று பாடுகிறார் மாணிக்க வாசகர்.:' சேவகம் வீரம், வீர விளையாடல்களைச் செய்த', வனாதலின் அவ்வாறு கூறினார். சிவபெருமான் செய்த வீரச் - செயல்களை நினைவூட்டும் எட்டுத் தலங்கள் தமிழ் நாட்டில் உள்ளன. அவற்றை அட்ட வீரட்டம் என்பர். . இறைவன் மெய்ஞ்ஞான வடிவாய் விளங்குகிறான். . அந்த ஞானம் உள்ளொளியாக நிற்பது. புறத்தே உள்ள பொருள்களைக் காட்டும் கதிரவன் ஒளி, சந்திரன் ஒளி, விளக்கின் ஒளி ஆகியவை புற இருளை மட்டும் போக்கக் கூடியவை...ஆனால் மெய்ஞ்ஞானமோ அக இருளாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/145&oldid=1418543" இலிருந்து மீள்விக்கப்பட்டது