பக்கம்:திரு அம்மானை.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

182 திரு அம்மானை அறியாமையை ஓட்டுவது; மெய்ப் பொருளைக் காட்டுவது. அந்த அறிவு என்றும் அழியாதது. - சீர் ஒளி சேர் ஆனா அறிவாய். ஒளி இருளை ஓட்டிப் பொருள்களின் வடிவையும் வண்ணத்தையும் காட்டுவது. அது புற ஒளி. அதைவிடச் சிறந்தது உள்ளொளி. அதனால் அது சீர் ஒளியாயிற்று. - அந்த ஒளியையுடைய அறிவே மெய்ஞ்ஞானம். முதலில் தேன் முதலியவற்றால் இறைவன் ஆனந்த வடிவனாய் இருப்பதைச் சொன்னார், ஆனா என்ற தனால் அழியாமல் நிலை நிற்பதைச் சொன்னார்; அந்த இயல்பைச் சத் என்பார்கள். அறிவு சித் எனப்படும். ஆகவே ஆனந்தம், சத், சித் என்னும் மூன்றையும் கூறி இறைவன் சச்சிதா னந்தன் என்பதைக் குறிப்பாற் பெற வைத்தார். இறைவன் எல்லா உயிர்களுக்கும். தலைவனாக இருக் கிறான். உயிர்களை வினைகளுக்கு ஏற்றபடி பிறவியெடுத்து வாழச் செய்கிறான். 'ஓர் அரசன் தன் குடிமக்களை இன்ன வாறு நடக்கவேண்டும் என்று வழிப்படுத்திக் காப்பது. போல இறைவன் காத்தருளுகிறான். உயிர்கள் அளவிறந் தன. அந்த அந்த உயிர்களின் வினைக்கு ஈடாக இன்பமும் துன்பமும் துய்க்கச் செய்கிறான். இறைவன். அரசன் நல் லோர்களுக்கு நலம் செய்தும் தீங்கு புரிபவர்களை ஒறுத்தும் தன் ஆட்சியை நடத்துவது - போல . இறைவனும் தன் அருளாட்சியை நடத்துகிறான்; 'அவ்வாறு பல உயிர்களுக் கும் தலைவனாக, அரசனாக விளங்கும் திறத்தை நாம் சொல்லிப் பாடுவோம்' என்கிறாள் அம்மானை ஆடும் பெண். அளவிறந்த பல் உயிர்க்கும் - - கோனாகி நின்றவா கூறுதுங்காண் அம்மானாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/146&oldid=1418542" இலிருந்து மீள்விக்கப்பட்டது