பக்கம்:திரு அம்மானை.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. காதல் அனுபவம்

"என்னடி இது? ஏதோ ஒருவகையாக இருக்கிறாயே? என்கிறாள் தோழி. இறைவனிடம் ஆராக் காதல் கொண்ட நங்கை பேசு கிறாள். - - "நான் மலரைச் சூடப் போகிறேன். "எந்த மலர்?" “கொன்றைப் பூவைச் சூடிக் கொள்ளப் போகி றேன்." "கொன்றைப் பூவையா? அந்தப் பூவை யாரும் புனைவது இல்லையே" "எம்பெருமான் - அதைத்தான் அணிந்திருக்கிறான், அதனால் அதுவே எல்லா மலர்களிலும் சிறந்தது. . அது பிரணவ மலர் அல்லவா?" "அதை நீ எதற்காகச் சூடிக்கொள்ள வேண்டும்?" “அவனுக்கு எது விருப்பமானதோ, அதுவே எனக்கும் ஏற்றது. அவன் திருத்தோளில் அந்த - மலர் மாலையே விளங்குகிறது. அதை அணிந்து கொண்டு அதன் மூலமாக அவனுடைய திருத்தோளில் எனக்கு உள்ள விருப்பத்தைப் ... புலப்படுத்துவேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/149&oldid=1418539" இலிருந்து மீள்விக்கப்பட்டது