பக்கம்:திரு அம்மானை.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'136 திரு அம்மானை

இறைவனை அணுகுவேன், நானும் கொன்றை மலரைச் சூடியிருப்பது கண்டு. அந்தப் பெருமான் என் - உள்ளக் கிடக்கையை உணர்ந்து கொள்வான், என்னிடம் அன்பு காட்டுவான். அவனுடைய திரண்ட தோள்களின் அழகையே பார்த்து இன்புறுவேன். அவன் என்னிடம் காட்டும் அன்புக் குறிப்பை அறிந்து அவனுடைய தோளைத் தழுவுவேன்; அவனை அணைத்துக்கொள்வேன்." - சூடுவேன் பூங்கொன்றை; சூடிச் சிவன் திரள் தோள் கூடுவேன்; கூடி முயங்குவேன். - ' “அவ்வாறு தழுவிக் கொள்ளும்போது எனக்கு ஒரு விதமான இன்ப மயக்கம் உண்டாகும். அந்த மயக்கத்தில் ஆழ்ந்து நிற்பேன். அதுவே ஒரு சிறந்த அனுபவம், அவன் என்னைச் சிறிது புறக்கணிப்பவனைப் போலத் தோற்றினால் என் உள்ளத்தில் ஊடல் எழும், அவனை அணைத்த பிறகு - நான் அவனை மணந்து கொண்ட காதலியாகி விடுவேன்; மணந்த பிறகு பெண்களுக்குக் கூடுவதற்கும் ஊடுவதற்கும் உரிமை உண்டு, ஆகவே சற்றே ஊடுவேன்." கூடி முயங்கி மயங்கி நின்று ஊடுவேன். - ' ' - - - “நான் வாடினாலும் என் உள்ளம் அவனையே நாடி நிற்கும். பெண்களின் பலவீனம் இது. அவனிடம் உள்ள காதலே அந்த ஊடலுக்கும் காரணம். அப்போது என் உள்ளத்தில் அவன் அருளைப் பெற வேண்டும் என்ற எண்ணம் வலிமை பெறும், அவன் திருவாயைப் பார்ப்பேன், அந்தத் திருவாயிலிருந்து ஓர் அன்புச் சொல் வராதா என்று ஏங்குவேன். அந்தத் திருவாயமிழ்து ஊறலை நுகர மாட்டேனா என்று உருகுவேன்,"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/150&oldid=1418538" இலிருந்து மீள்விக்கப்பட்டது