பக்கம்:திரு அம்மானை.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

138 திரு அம்மானை .. போலத் தோற்றக்கூடும். அதனால் என் உறுதி தளராது இறைவனுடைய அருள் நிச்சயமாகக் கிடைக்கும் என்ற உறுதியினால், வாடின யான் மறுபடியும் வாட்டம் நீங்கி - மலர்ச்சி பெறுவேன்; உள்ளம் மலர முகம் மலர நிற்பேன், குழந்தைக்கு ஒரு பொருளைக் காட்டிப் பிறகு மறைத்து, அது ஏங்கும் போது மறுபடியும் அளிப்பது போன்ற விளையாட்டை அவன் செய்யக்கூடும். என் உள்ளத்தே * நிற்பவனாதலின் என் அந்தரங்கத்தை அறிவான்; எனவே அவன் என்னை ஏமாற்றாமல் அருள் புரிவான் என்ற எண்ணம் தோற்றும் போது எனக்கு உற்சாகம் உண்டாகும்; புது மலர்ச்சி எழும், வாடுவேன் ; பேர்த்தும் மலர்வேன். * “இவ்வாறெல்லாம் - தன்னிடம் உறுதியான காதல் கொண்ட என்னை அந்த இன்பச் சுழற்சியிலே ஆழ்த்தியும்: புறம் போக்கியும் மீட்டும் சிந்தையில் நின்று. இனிமை. தந்தும் திருவிளையாடல் புரிபவன் அவன். அவன் எது செய்தாலும் அது . எனக்கு - இன்பமாகவே இருக்கும், - உணவை உண்ணும் வாய்ப்பு உடையவனுக்குப் பசி, எடுத்தால், பிறகு உண்ணும்போது அந்த உணவின் சுவை மிகுதியாகத் தோன்றும், ஊடியும் வாடியும் நிற்கும் எனக்கு இறைவனுடைய அருள் இன்பம் கிடைக்கும் போது அது தெவிட்டாத தேனாய், ஆராத அமுதமாய், இருக்கும். "அவன் எவ்வாறு இருப்பான்?" என்று தோழி' கேட்கிறாள்.. | -. "அவனை நெடுந்தூரத்திலிருந்து பார்க்கும்போதே அடையாளம் தெரிந்து விடும். அவன் திருக்கரத்தில், அனலை . ஏந்தியிருப்பான். அந்த அக்கினியே சாட்சியாக நான் அவனை: :.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/152&oldid=1418550" இலிருந்து மீள்விக்கப்பட்டது