பக்கம்:திரு அம்மானை.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காதல் அநுபவம் 137 அடைவேன். அனலை - ஏந்திக்கொண்டு ஆனந்த நடனம். ஆடுபவன் அவன். - "நீ சொல்வதெல்லாம் புதுமையாக இருக்கிறதே!" தோழி இவ்வாறு சொல்கிறாள். "ஆம்! உலகத்தில் எங்கும் காணாத புதுமை இது. அவன் கொன்றையை அணிந்திருப்பது புதுமை, அனல் ஏத்தி ஆடுவது புதுமை. அவனே ஒரு காலைக்கு ஒருகால் அழகும் இளமையும் மிளிரும் - திருமேனிப் புதுமையை உடையவன், அவனைக் காதலிக்கும் என் இயல்பும் புதுமை. - தான்," ' “நாம் அம்மானையல்லவா ஆடுகிறோம்? அதை மறந்து விட்டாயா" “மறக்கவில்லை. அதே சமயத்தில் அவனையும் மறக்க.. முடியவில்லை, என் உள்ளம் கவர்ந்து உருக்கும் அந்தப் பெருமானுடைய செவ்வண்ணத் திருவடியையே' . பாடி ஆடுவோம். அவன் புகழைப் பாடுவதில் உண்டாகும் இன்பம் வேறு எதனாலும் வராது. அவன் திருவடியையே நாம் பாடி அம்மானை ஆடுவோம். அவன் அன்லேந்தி" ஆடுகிறான். நாம் அவன் திருவடியைப் பாடி அம்மானை ஏந்தி ஆடுவோம், சூடுவேன் பூங்கொன்றை ; சூடிச் சிவன் திரள் தோள் -- கூடுவேன்; கூடி முயங்கி மயங்கிநின்று ஊடுவேன்; செவ்வாய்க்கு உருகுவேன்; உள் உருகித் தேடுவேன்; தேடிச் சிவன் கழலே சிந்திப்பேன்; வாடுவேன்: பேர்த்தும் மலர்வேன்; அனல் ஏந்தி ஆடுவான் சேவடியே பாடுதுங்காண் அம்மானாய்! ..'

  • அம்மானை ஆடும் பெண்ணே , யான் சிவபெருமான் பால் காதல் கொண்டவளாதலின் அவனுக்குரிய - -
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/153&oldid=1418551" இலிருந்து மீள்விக்கப்பட்டது