பக்கம்:திரு அம்மானை.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

18. - எளிவந்த பெருமான் சிவபெருமானுடைய ஒரு பாதியில் அம்பிகை எழுந் தருளியிருக்கிறாள். அவனை, "மாதிருக்கும் பாதியன்" என்று மணிவாசகர் பாடுவார். இறைவனுடைய நிறம் செம்மை; இறைவியினுடைய நிறம் பசுமை. செம்மை நிறத்தின் அருகே அம்மையின் நிறம் எடுப்பாகக் கிளர்ந்து 'தோன்றும்.. - : அம்பிகை இனிய மென்மையான சொல்லையுடையவள். திறத்தால் கிளி போன்ற பசுமையை உடையவளாக இருப் பது போலச் சொல்லாலும் கிளியைப் போல இருப்பவள்; மென் மொழியைப் பேசி இன்புறுத்துவாள், கலைமகளின் வீ உணயிசையும் தோல்வியடையும் இனிமை அம்மையின் மொழிக்கு உண்டு. இதைச் சங்கராசாரியார் சௌந்தர்ய வஹரியில் ஒரு சுலோகத்தில் சொல்கிறார். கலைமகள் அம்பிகையின் சந்நிதானத்திலிருந்து வீணை வாசிக்க விரும்பினாள். அன்னையின் திருவுள்ளச் : சம்மதம் பெற்று வாசிக்கத் தொடங்கினாள். கலைஞர்களுடைய கலைத்திறத்தைப் பாராட்டினால்தான் அவர்களுக்கு ஊக்கம் உண்டாகும். ஆதலின் கலைமகளின் இசையைக் கேட்டு மகிழ்ந்த தேவி, “நன்றாக இருக்கிறது என்று சொன்னாளாம்: அதைக் கேட்டவுடன் கலைமகள் வீணை - வாசிப்பதை நிறுத்தி அதை உறையிலிடத் தொடங்கினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/156&oldid=1418554" இலிருந்து மீள்விக்கப்பட்டது