பக்கம்:திரு அம்மானை.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

S. எளிவந்த பெருமான் அம்பிகை பாராட்டிச் சொன்ன மொழி யாழிசையை - விட', இனியதாக இருந்ததாம். அதைக் கேட்ட கலைமகள், 'இந்த இனிமைக்கு முன் நம் வீணை இசை எம்மாத்திரம்?' என்று - நாணி வீணையை உறையில் இட்டாளாம். இப்படி ஓர் அழகிய காட்சியைச் சங்கராசாரியார் காட்டுகிறார். : அத்தகைய' இனிய மென்மையான மொழியைப் படைத் - தவள் அன்னை; கிளியின் சொல்லைப் போன்ற இனிய மொழியை உடையவள். அவளை ஒரு பாதியில் கொண்டி ருக்கிறான் இறைவன், அந்தப் பாதியின் பச்சை நிறம் நன்றாக விட்டு விளங்குகிறது. - கிளிவந்த மென் மொழியாள் கேழ் கிளரும் பாதியனை. 'கிளிவந்த': என்பதற்கு கிளியின் மொழியினது இயல்பு அமைந்த என்று பொருள் கொள்ள வேண்டும். அம்பிகை ' யின் மொழியைக் கேட்டுக் கிளிகள் தம் இனமென்று வந்தன; அப்படி. வருதற்குக் காரணமான மொழி என்றும் கொள்ளலாம்; "ஆயோர் எனுங்குரல் ஐயோ புனத்தை அழிக்கின்றதே" என்ற பழம் பாடலில் இந்தக் கருத்து இருப்பதைக் காணலாம், 'ஆலோலம் பாடும் குறமடந் தையின் குரல் கிளிகளை ஒட்டாமல் அது தம் இனத்தின் குரலென்று எண்ணி வந்து கூடித்' தினைப்புனத்தை அழிக்கச் செய்கின்றது' என்பது அதனால் விளங்கும் செய்தி. - திருமாலும் பிரமனும் காண இயலாதபடி சோதி வடி 'வாக நின்றான் இறைவன். அவனை உள்ளத்தில் தியானித்துப் பழகினால் அவன் வடிவைக் காணலாம். - “கரங்கு விவார் உள்மகிழும் - கோன்கழல்கள் வெல்க என்று பிறிதோரிடத்தில் மணிவாசகர் கூறுவார். அவ் வாறின்றி மாலும் அயனும் வெளியே வந்து அவன் அடி முடிகளைத் தேடியதனால் அவர்களால் அறிய முடியவில்லை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/157&oldid=1418555" இலிருந்து மீள்விக்கப்பட்டது