பக்கம்:திரு அம்மானை.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

.' . . - . 144 திரு அம்மானை அவர்களால் காண முடியாத ஞான சொரூபியாக இருப் பவன் இறைவன். வெளி வந்த மால் அயனும் காண்பரிய வித்தகனை. பத்துடை அடியவர்க் கெளியவன் பிறர்களுக் கரிய வித்தகன் என்று திருவாய் மொழியில் திருமாலைப் பிறருக் கரிய வித்தகன் என்று நம்மாழ்வார் கூறுவது இங்கே நினைவுக்கு வருகிறது. - - இவ்வாறு மாலயனும் காணற்கரியவனாக உள்ள சிவ பெருமான் தமக்கு எளிவந்தருளிய சிறப்பைச் சொல்ல வரு கிறார் மணிவாசகர். - - - - : அடியவர்களுக்கு அவன் தன் அருளை வழங்குவான்; இன்ப அநுபவத்தைத் தருவான். ' தேனை அடையிலிருந்து பிழியும்போது அது கக்கலும் கரிசலுமாக இருக்கும். அதை வடிகட்டித் தெளிவாக்கி நுகர்வார்கள், இறைவன் ' தெளிந்த தேனாகவே இருக்கிறான். அவனை அடியார்கள் அநுபவிக்கிறார்கள். “பாலும் தெளிதேனும்” என்று ஔவையார் தம் பாட்டிலும் தெளிந்த தேனைச் சொல்கிறார், தெளிவந்த தேறலை. இறைவனுடைய மாதிருக்கும் பாதியனாகிய' திருக் கோலத்தைச் சொல்லி, அவன் `மாலும் அயனும் காண் பதற்கு அரியவன் என்று கூறி, ஆயிலும் அடியார்களுக்குத், தெளிந்த தேனைப்போல இன்பம். தருபவனாக இருப்பதை * உரைத்து, பிறகு தமக்கு அருள் புரிந்ததைச் சொல், . இறைவன் மாணிக்கவாசகரை ஆட்கொள்வதற் காகக் குருவடிவம் கொண்டு காண்பதற்கு எளியவனாக வந்து, திருப்பெருந்துறையில் தங்கியிருந்தான், மணிவாசகர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/158&oldid=1418556" இலிருந்து மீள்விக்கப்பட்டது