பக்கம்:திரு அம்மானை.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எளிவந்த பெருமான் - 145 ware. . அவனைத் தரிசித்தபோது அவர்பால் இரக்கம் வைத்து உபதேசம் செய்தான். பிறராலே இத்தகையது என்று எண்ணுவதற்கரிய இனிமையை உடையது அவன் அருள். அவன் அருள நுபவத்தைப் பெறும் போது யாவும், மறந்த நிலை உண்டாகும். "உணர்ந்தார்க் குணர்வாயோன்" என்று திருக்கோவையாரில் பாடுவார் மாணிக்கவாசகர்: சீரார் பெருந்துறையில் எளிவந்து இருந்து இரங்கி எண் அரிய இன்னருளால்.... இறைவன் கண் காணக் கோலம் காட்டி, காது கேட்க இன்னுரை கூறி, உள்ளம் இரங்கி அருள் புரிந்தான். அந்த அருளால் உள்ளத்தில் உள்ள அறியாமை யென் னும் இருள் முற்றும் போய்விட்டது. அவனுடைய உபதேசத்தால் ஞான ஒளி வந்து அவருடைய உள்ளத்திலே புகுந்தது. அங்கே இருள் போய் ஒளி திகழ்ந்தது. இருள் நிறைந்த உள்ளத்தில் ஒளியைப் பாய்ச்சி யருளிய தண்ணளி உடையவன் இறைவன். - ஒளி வந்து என் உள்ளத்தின் உள்ளே ஒளி திகழ அனிவந்த. - மாணிக்கவாசகரை ஆட்கொள்வதற்காக இறைவன் குருவின் கோலங்கொண்டு எளியவனாக வந்தான். பு றக்கண் காண வந்த அப்பெருமான் அகக்கண்ணில் ஒளியேற்றினான்; ஞான ஒளியைப் பாய்ச்சி அஞ்ஞான இருளைப் போகச் செய் தான். இவ்வளவும் மாணிக்கவாசகரின் முயற்சியே இல்லாது அவனுடைய தண்ணளியால் விளைந்தவை. - அவன் அந்தணத் திருக்கோலம் கொண்டு திருப்பெருந் துறைக்கு எழுந்தருளி வந்து மணிவாசகரை ஆட்கொண். . டான்.. ' 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/159&oldid=1418557" இலிருந்து மீள்விக்கப்பட்டது