பக்கம்:திரு அம்மானை.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

19. இன்னமுதை அன்னாள் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று தொழில்களையும் சிவபெருமான் பிரமன், திருமால், உருத்திரன் என்ற மூன்று மூர்த்திகளிடம் ஒப்படைத்திருக் கிறான். அந்த மும்மூர்த்திகளுக்கும் முதல்வனாக, தலைவனாக இறைவன் விளங்குகிறான். அந்த மூவர்களும் வந்து வந்து போவார்கள், ஆனால் இறைவன் என்றும் நித்தியனாக இருந்து அவர்களைத் தன் ஆணையினால் - தொழில் செய்யும் படி செய்கிறான். - "மூஅண்ணல் தன் சந்நிதி முத்தொழில் இயற்ற வாளா மேவுஅண்ணல்" என்று பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்தில் பாடுவார். - . ' முன்னானை மூவர்க்கும். அவன் எல்லாப் பொருளுமாக. இருந்து மறைர். விற்கிறான், ' . உலகத்தைப் படைத்தல் முதலியவற்றை செய்யும் முத்தேவர்களும் தோற்றுவதற்கு முன்பே அவா இருந்துகொண்டிருக்கிறான், அவ்வாறே அவர்கள் தத்தம்: குரிய காலம் முடிந்து மறைந்த பிறகும் அவன் இருக்கிறான் முற்றுமாய் முற்றுக்கும் பின்னானை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/163&oldid=1418566" இலிருந்து மீள்விக்கப்பட்டது