பக்கம்:திரு அம்மானை.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

150 | திரு அம்மானை எல்லாவற்றுக்கும் மூன் உள்ளவனாய், யாவும் அழிந்த பிறகும் அழியாமல் பின்னும் உள்ளவனாய் விளங்கும். அப்பெருமானை, - "முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே! பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே! என்று மணிவாசகர் திருவெம்பாவையில் பாடுகிறார். இறைவன் பின்னு செஞ்சடை. உடையவன், அந்தச் சடை அவனுடைய பழமையைக் காட்டும் அடையாளமாக விளங்குகிறது. - பிஞ்ஞகனை, - அப்படி உள்ள சிவபெருமான். அடியார்கள் வந்து தன்னை வழிபடும்படி கோலங் - காட்டித் திருப்பெருச் துன ரயில் நித்திய வாசம் செய்து கொண்டிருக்கிறான். ‘அந்தத் தலத்தில் என்றும் தலைவனாக இருந்து விளங்கு கிறான். அவ்வப்போது அந்தத் தலத்தில் பெரியவர்கள் என் றும் தலைவர்கள் என்றும் பலர் தோன்றி மறைவார்கள். அவனோ அங்கே என்றும் நிலைகொண்டிருக்கிறான். பேணு பெருந்துறையின் மன்னானை . தேவர்களுக்கெல்லாம் பெரிய தேவன் - அவன்; மகா தேவன். வானுலகத்துக்கு அவ்னே இறைவனாக என்றும். இருக்கிறான். வானுலகில் தத்தமக்குரிய பகுதிகளில் ஆட்சி புரீயும் தேவர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கும் மேலாக,. அவ்வுலகின் மேலான தலைவனாக இருப்பவன் இறைவன், மாநிலங்களில் அமைச்சரவை இருந்து. ஆட்சி நடத்தும், எனினும் அவர்களுக்கும் மேலாக ராஷ்டிரபதியாகிய குடிகரசுத் தரவர் பதவி வகிப்பார். அமைச்சரவை - கலைக்கப்பட்ட போது. . அவரே. ஆட்சியை - நடத்துவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/164&oldid=1418565" இலிருந்து மீள்விக்கப்பட்டது