பக்கம்:திரு அம்மானை.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திரு அம்மானை நாட்டையும் அவர் - சொல்வார். இறைவனைத் தென் பாண்டி நாட்டில் தரிசித்து அருள் பெற்றார். தாம் இனங் கண்டு கொண்ட தென்னாடுடைய அந்தச் சிவபெருமானை எந்நாட்டவர்க்கும் இறைவன் என்று அவர் சொல்வார். “ தென்னா டுடைய சிவனே போற்றி -- எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி" என்பது போற்றித் திருவகவல். தென்பாண்டி நாட்டானை. திருவானைக்காவிலுள்ள சிவபெருமானுக்கு, என்னானைக் கன்று' என்பது ஒரு திருநாமம், அதை நினைக்கிறார். என் ஆனை. அவன் யானையைப் போலக் கம்பீரமாக விளங்கு : கிறான். இருகை வேழம் ஒத்து" என்று வேறோரிடத்தில் பாடுவார் மணிவாசகர். -- அன்பர்கள் இறைவனை நெருங்கி உளம் கசிந்து, “என் ஆனை! என் அப்பன் என்று போற்றுவார்கள். குழந்தை'. களை இவ்வாறு சொல்லிப் பாராட்டுவது தாய் தந்தையர் இயல்பு. அவ்வாறு, 'என் ஆனை, என் - அப்புன்' என்று அன்பினால் நெருங்கி உள்ளம் உருகிப் போற்றுகின்ற அன்பர்களுக்கு அவன் இனிய அமுதத்தைப் போல உயிரில் இனிமையைப் பெய்கிறான், - " என் ஆனை என் அப்பன் என்பார்கட்கு இன்னமுதை. '. அன்பர்கள் ஆனை என்றும் அப்பன் என்றும் சொல்வது மட்டும் அன்று; அவன் தமக்கே உரிமையுடையவன் என்று தனித்தனியே 'என் ஆனை, என் அப்பன்' என்கிறார்களாம். அவனைப் பெற்றால் யானையைப் பெற்ற செல்வர்களைப் - போலச் செம்மாந்திருக்கலாம். அவன் 'என்னானை' என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/166&oldid=1418563" இலிருந்து மீள்விக்கப்பட்டது