பக்கம்:திரு அம்மானை.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திரு அம்மானை உயிரில் கலந்து இனிக்கும் தகைமையையும் நினைத்து உருகு கிறார் மணிவாசகர். முன்னானை மூவர்க்கும், முற்றுமாய், முற்றுக்கும் பின்னானைப் பிஞ்ஞகனைப் பேணு பெருந்துறையின் ' மன்னானை வானவனை, மாது இயலும் பாதியனைத் தென் ஆனைக் காவானைத் தென்பாண்டி நாட்டானை 'என் ஆனை. என் அப்பன்' என்பார்கட்கு இன் அமுதை அன்னானை, அம்மானைப் பாடுதுங்காண், அம்மானாய்! * அம்மானை ஆடும் பெண்ணே , படைப்பு முதலிய மூன்று: தொழில்களை இயற்றும் பிரம விஷ்ணு ருத்திரர்களுக்கும் முன்னே இருப்பவனை, எங்கும் உள்ள பொருள் களாய், எல்லாப் பொருள்களும் அழிந்தாலும் அழியாமல் பின்னும். நிலைத்திருப்பவனை, தேவலோகத்தில் தலைவனாக இருக்கும். மகாதேவனை, உமாதேவியார் எழுந்தருளிய ஒரு பாதியை - உடைய அர்த்தநாரீசுவரனை, பாரத நாட்டில் தென் திசையி லுள்ள திருவானைக்கா என்னும் தலத்தில் கோயில் கொண்டு: . நித்திய வாசம் செய்பவனை, தெற்கே உள்ள பாண்டி, நாட்டில் உள்ளவனை, 'என். ஆனை, என் அப்பன்' என்று அன்பினால் நெருங்கியும் பணிந்தும் பாராட்டும் அடியவர்" களுக்கு இனிய அமுதம் போன்றவனை, யாவருக்கும். தலைவனை நாம் பாடுவோம். . . . . . [முன் என்பதனுடன் ஆன் என்னும் விகுதி சேர்ந்து முன்னான் என நின்றது; பின்னான் என்பதும் அத்தகையதே. மூவர் என்பது தொகைக்குறிப்புச் சொல், மூவர்க்கும் முன்னானை. முற்றும் சராசரங்கள் - அனைத்தும் - அவன் 'பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பர் பூரணன்' என்பதை இது குறித்தது. முற்றுக்கும் அழியும். - 'தன்மையுடைய எல்லாவற்றுக்கும். பின்னானை - அவை அழிங் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/168&oldid=1418561" இலிருந்து மீள்விக்கப்பட்டது