பக்கம்:திரு அம்மானை.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இன்னமுதை அன்னான் 155. தாலும் தான் அழியாமல் பின்னும் நித்தியனாக விளங்கு... பவனை. பிஞ்ஞகன்-பின்னிய சடையை உடையவன். பல காலமாக இருத்தலின் கேசம் சடையாகிவிட்டது. பேணு.. அடியார்கள் தமக்குக் கிடைத்த நிதியைப் போல அடைந்து போற்றும். மன்னான்: ஆன் விகுதி பெற்றது; மன் என்னும் சொல் அன் விகுதி பெற்று மன்னன் என்று வருவது போல" இது ஆன் விகுதி பெற்று மன்னான் என வந்தது. வானவன் என்றது தேவலோகத்திலும் இறைமை செலுத்தும் இயல்பை நோக்கி, "வானவன்காண் வான்வர்க்கு மேலர் னான்காண்" என்பது அப்பர் தேவாரம், - - மாது- உமாதேவி. இயலும்- தங்கித் தன் அருளைக் - கொழிக்கும்; பாதியென்றது வாம பாகத்தை, தென் " ஆனைக்கா: தென் என்பது இனத்தைச் சுட்டாத அடை; தென்பாண்டி நாட்டானை என்பதிலுள்ள தென் என்பதும் - அத்தகையது; பாரத நாட்டில் தென் திசையிலுள்ளது என் பதைக் குறிக்க வந்தது. என்பார்கள் என்று பொதுவாகச் சொன்னாலும் அவ்வாறு நெருங்கியும் பாராட்டியும் சொல் ' பவர்கள் அடியார்கள் என்று கொள்ள வேண்டும். அமுது என்னாமல் இன்னமுது என்று சிறப்பித்தது, விண்ணோர் தரம் கடைந்த அமுதுண்டும் சாவ, தன்னை உட் கொண்டார் என்றும் பொன்றாத இன்ப நிலையைப் பெறச் . செய்வதுபற்றி, இங்தே இனிமை, உயிரிற் கலந்து இனிக்கும் இனிமை; சிவானந்தம், அம்மானை - தலைவனை. காண்: அசை.) இது திருவம்மானையில் வரும் 19-ஆவது திருப்பாடல்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/169&oldid=1418560" இலிருந்து மீள்விக்கப்பட்டது