பக்கம்:திரு அம்மானை.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரானந்தம். 157 தையே குதிரையாகக் கொண்டு அதன்மேல் ஏறிவர் தான். அந்தக் குதிரை அவனுடைய அரசுரிமைக்கு ஏற்றது;. எங்கே சென்றாலும் வெற்றியைப் பெறுவது, கொற்றக் குதிரையின்மேல் வர்தருளி. 'அவ்வாறு அடியவர்களுக்கு எளியவனாக வரும். சிவ' பெருமான், அவர்களுக்கு அருள் செய்யப் புகுவான் :அடியார்கள் மனிதர்களாகையால் அவர்களிடம் குற்றங் களும் குணங்களும் சேர்ந்திருக்கும், என்றாலும் அவர் களிடம் உள்ள பேரன்பினால் அவர்களுடைய குற்றங். களைப் பாராமல் குணங்களை மாத்திரம் திருவுள்ளத்திற். கொண்டு அருள் வழங்க - முற்படுவான். தன் அடியார் குற்றங்கள் நீக்கிக் - - குணம் கொண்டு கோதாட்டி.. மனிதன் உலகில் பிறந்த பிறகு மெல்ல மெல்லப் பாசத்தை வளர்த்துக் கொள்கிறான். முதலில் தாயையும் - பிறகு தந்தையையும் அப்பால் மற்றச் சுற்றத்தினரையும் அறிந்து அவர்களோடு உறவு கொண்டு இணைந்து பழகு. கிறான். அந்த உறவு இறுக இறுக. அவர்களுக்கு வரும் இன்ப துன்பங்களை தன்னுடையனவாக எண்ணி அவற்றால் உண்டாகும் உணர்ச்சிகளைப் பெறுகிறான். இவ்', வாறு நாளடைவில் அவனுடைய பாசம் விரிந்து வளர்ந்து தனக்குள் அவனை அழுத்திவிடும், அது - காரணமாக அவனுக்கு இன்னலே மீகுதியாகும். இறைவனுடைய" திருவருள் கிடைத்தால் இந்தச் சுற்றத் தொடர்பு மெல்ல மெல்ல நீங்கும். சிலர் தம் சுற்றத்தாரென்றும், பலர் அல்லா தவரென்றும் உள்ள வேறுபாட்டுணர்ச்சி நழுவி விடும். உலகில் உள்ள எல்லா உயிர்களும் இறைவனுடைய குழந் தைகள் என்ற உணர்வினால் சர்வஜீவ தயை அவனுக்கு., உண்டாகும். --- சுற்றிய சுற்றத் தொடர்வு அறுப்பான், .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/171&oldid=1418571" இலிருந்து மீள்விக்கப்பட்டது