பக்கம்:திரு அம்மானை.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-158 திரு அம்மானை - இவ்வாறு அருள் செய்கின்ற தன்மை இறைவனுக்கு நெடுங்காலமாக இருந்து வருகிறது. அவன் மிக மிகப் பழையவன். ஆதலால் அவனுடைய புகழும் மிகத் தொன்மையானது. அந்தப் புகழை நன்றாகத் தேர்ந்து : பிறவற்றை எண்ணாமல் ' அதனையே பற்றிப் பாடுவது மெய்யன்பர்களின் இயல்பு. தொல் புகழே பற்றி. நம்மைக் கட்டுப்படுத்தியிருக்கும் பாசத்தைப் போக்க வேண்டுமானால் இறைவனுடைய திருவருட்பலம் வேண்டும். பற்று அற்றால் தான் பேரின்ப வாழ்வு கிடைக்கும். பற்று < முழுவதும் அற்ற பிறகு இறைவனைப் பற்றலாம் என்பது < நடவாத காரியம். பற்று உள்ள போதே அவனைப் பற்றிக் ' கொண்டால் அவனுடைய அருளால் முதலில் பற்று அற, பிறகு ஆனந்தம் கிடைக்கும். ' ' நாம் அவனைப் பற்ற முயற்சி பண்ணினால் அவன் * நம்மைப் பற்றிக்கொள்ள வருவான். சிறு குழந்தை தாயைக் கட்டிக்கொள்ளப் போகும் பொழுது, தாய் . ஆவலுடன் முன் வந்து கட்டித் தழுவுவது போல, அன்பர் --களுடைய ஆர்வத்தை அறிந்த - இறைவன் அவர்களைப் பற்றிக் கொண்டு பேரானந்தத்தை வழங்குவான். பற்றை அறச்செய்வதும் அவன் அருள்: பற்று முற்றும் அற்றபின் * பேரின்பம் வழங்குவதும் அவன் அருளே, இப்பாசத்தைப் பற்று அற நாம் பற்றுவான் -- - பற்றிய பேரானந்தம், ' பற்று உள்ள போதே. அவனைப் பற்றிக் கொண்டால் பிறகு அந்தப் பற்று நீங்கி இன்பமடையும் தகுதி உண்டா . கும். இதனை, - . - . - 5 பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றைப் - - . . . . பற்றுக பற்று விடற்கு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/172&oldid=1418570" இலிருந்து மீள்விக்கப்பட்டது