பக்கம்:திரு அம்மானை.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பேரானந்தம் 159 என்று திருவள்ளுவர் சொல்கிறார். எனவே, இறைவனு டைய புகழையே பேசி அவனைப் பற்றிக் கொண்டால். அவன் நம் பற்றைக் களைந்து. தன்னுடைய அருள் இன் பத்தை நுகரும்படி வைப்பான். - ' 'இப்பாசத்தைப் பற்று அற நாம் பற்றுவான் . பற்றிய பேரானந்தம். இத்தகைய ஆனந்த அநுபவம் பெற்ற பெருமிதம் தோன்ற, 'அதைப் பாடுவோம்' என்கிறார் மணிவாசகர்'. பெற்றி பிறர்க்கரிய பெம்மான், பெருந்துறையான், கொற்றக் குதிரையின் மேல் வந்தருளித் தன் அடியார் குற்றங்கள் நீக்கிக் குணம் கொண்டு கோதாட்டிச் சுற்றிய சுற்றத் தொடர்வு அறுப்பான் தொல்புகழே பற்றி இப் பாசத்தைப் பற்று அறநாம் பற்றுவான் பற்றியபே ரானந்தம் பாடுதும் காண், அம்மானாய்! * அம்மானை ஆடும் பெண்ணே, தன்னுடைய பெற்றி பிறருக்குக் கிடைப்பதற்கரிய பெருமான், தன் அடியார் . "களுக்கு அருள் செய்யும் பொருட்டுத் திருப்பெருந்துறை என்னும் தலத்தில் சித்திய வாசம் செய்பவன், வேதமாகிய அரசுரிமைக்குரிய குதிரையின் மேல் எழுந்தருளி வந்து.. தன் அடியார்களின் குற்றங்களை நீக்கி, அவர்களுடைய குணங்களைத் திருவுள்ளத்தில் கொண்டு, அவர்களைக் குழந் தைகளைப் போலச் சீராட்டி, அவர்களை அதுகாறும் சுற்றி யிருந்த சுற்றத்தின் தொடர்பை அறுப்பவன் ஆகிய சிவ ' பெருமானுடைய பழைய புகழையே உள்ளத்தால் பற்றிக் கொண்டு, நம்மைக் கட்டுப்படுத்தியுள்ள இந்தப் பாசத்தை நம்மோடு பற்றுதல் அறும்படி நாம் பற்றுவதற்கு உரிய அப்பெருமான், எளிவந்து நம்பால் உறவு கொண்டு பற்றிய பேரானந்தத்தைப் பாடுவோம்.* [பெற்றி. ஆற்றலும் அறிவும் பிறவுமாகிய தன்மைகள் பிறர்க்கு அரிய - பிறருக்குப் பெறுவதற்கரிய, பிறரால் அறிவுதற்கரிய என்றும் கொள்ளலாம். பெம்மான் - பெரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/173&oldid=1418569" இலிருந்து மீள்விக்கப்பட்டது