பக்கம்:திரு அம்மானை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதின் தெளிவு 31 வில்லை, அவர்களுக்கு. உடம்பில்ை தவமுனிவர்களாய் விட்டாலும், உள்ளத்தால் இன்னும் தம் பெருமையை மறவாத தேவர்களாகவே இருந்தார் . நம்மை மறந்து இறைவனைத் தியானிக்கும் உள்ளப்_கு அவர்களிடம் இல்லை. ஆகவே இறைவன் அவர்களுக்குக் காட்சிதரவில்லை. இன்னும் அவர்கள் காண்பரிய ஒருவகைவே இருந்தான். - வான்வந்த தேவர்களும் மால் அயைேடு இந்திரனும் கான் கின்று வற்றியும் புற்று எழுந்தும் காண்பரிய தான். - - - அவனைத் தேடிக் கொண்டு மால், அயன், இந்திரன், தேவர்கள் ஆகியவர்கள் தவம் புரிய, அவர்கள் உள்ளத்துக்குத் தட்டுப்படாமல் இருக்கும் இறைவன், உண்மையில் தம்மை மறந்து, ஆத்மசமர்ப்பணம் செய்பவர் யார் என்று பார்த்தான். ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் இருந்து அதைத் தட்டிப் பார்க்கும் சர்வாந்தர்யாமியாகிய அவன், அந்தத் தேவர்களின் உள்ளத்திலே பதவி மோகம் என்னும் புற்று எழுந்திருப் பதைக் கண்டான். உடல் வற்றியும் உள்ளத்தில் ஆசை வற்ருமல் இருப்பதை உணர்ந்தான். புறஞ்சுவர் கோலம் செய்து உள்ளே குப்பையைக் கொட்டியிருந்தால் அத்தகைய வீட்டிற்குள் புகுவதற்கு யாருக்காவது மனம் வருமா? 'இவர்கள் உள்ளம் காம் தங்குவதற்கு ஏற்ற தன்று' என்பதை உணர்ந்தான். தான் தங்குவதற்கு ஏதேனும் தூய்மையான அகம் எங்கே இருக்கிறது என்று தேடுகிறவன் அவன். தேவர்களின் உள்ளம் குப்பை மண்டிக் கிடப்பதை அறிந்து அந்தப் பக்கமே. போக விரும்பாமல், வேறு எந்த இடம் நமக்கு ஏற்றதாக இருக்கும் என்று தேடினன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/45&oldid=894914" இலிருந்து மீள்விக்கப்பட்டது