பக்கம்:திரு அம்மானை.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- qir ಆ655 பொன்மேனி 69 மானம்; நகரத்தில் உள்ள பலரும் காண, தன் பக்கத்தில் உள்ள உமாதேவியார் காண, அடிபட்ட அவமானத்தின் அளவை எவ்வாறு எடுத்துச் சொல்வது? எல்லா மண்டலங்களுக்கும் ஈசனுக இருக்கிறவன் மண் சுமந்தது அவமானம். கூலியில்லாமல் தியாகபுத்தி யுடன் செய்தால் அது தொண்டாகும். அவனே கூலி பேசிக் கொண்டான். முன்பணம் வாங்கிக் கொள்வது போலப் பிட்டு வாணிச்சியிடம் உதிர்ந்த பிட்டை முன்கூட்டியே வாங்கி உண்டான். வேலை செய்யாமலே கூலி பெறுவது சரியான செயல் அன்று. ஒவ்வொன்றையும் பார்த்தால் அவமானத்தின்மேல் அவமானமாகத் தோன்றுகிறது. குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்படவேண்டும் என்பார்கள். அப்படியாவது தன்னைவிடப் பெரியவல்ை அடிபட்டான? எல்லா உலகங்களுக்கும் ஈசனகிய அவன் தமிழ் மண்டலத்தின் ஒரு பகுதியாகிய பாண்டி காட்டு அரசல்ை,அடிபட்டான் சே, எத்தனை இழிவு! - கலி மதுரை கூலி கொண்டு அக் கோவால் மொத்துண்டு. எல்லோருக்கும் அவரவர்கள் வினைக்கு ஏற்றபடி கூலி கொடுக்கும் இறைவன் இப்போது தானே கூலி பெற்ருன். வியன் மண்டலத்து ஈசன் யாரோ ஒருவல்ை மொத்துண் டான் இறைவனே அடித்தவன் அரிமர்த்தன பாண்டியன் என்று புராணம் சொல்கிறது. மணிவாசகர் அவன் பெய ரைச் சொல்லவில்லை. பாண்டியன் என்ருவது சொல்லக் கூடாதா? அப்படியும் சொல்லாமல் சும்மா கோ என்று ஒரெ ழுத்தால் சொல்லி விட்டார். 'அந்தப் பாவி என்று மனம் கடிந்து சொல்வது போல,அவனே நெடுந்துாரத்தில் வைத்துச் சுட்டுவது போல, அக்கோ என்ருர். . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/83&oldid=894997" இலிருந்து மீள்விக்கப்பட்டது