பக்கம்:திரு அம்மானை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 திரு அம்மானே வனகவே அவருக்குத் தோன்றின்ை. திருவண்ணுமலைக்கு வந்து இறைவனைத் தரிசிக்கையில், திருப்பெருந்துறையில் கண்ணுர் கழல் காட்டி ஆண்டுகொண்டவனேயே கண்டார். எங்கும் அவன் கழலேயே கண்ட அடிகளுக்குத் திருவண்ணு மலையில் அவன் காட்சி அளித்தது வியப்பு அன்று. எவன் விண்ணுளும் தேவருக்கு மேலான வேதியகை நின்ருனே, எவன் மண்ணுளும் மன்னவர்க்கு மாண்பாகி கின்ருனே, எவன் தண்ணுர் தமிழளிக்கும் தண்பாண்டி காட்டானே, எவன் பெண்ணுளும் பாகனே, எவன் பெருந்துறையில் கழல் காட்டி ஆட்கொண்டானே, அவனே அண்ணு மலேயாகை எழுந்தருளியிருக்கிருன். •. 'வெள்ளிடை மலே' என்று தெளிவாகப் புலப்படு வதைச் சொல்வது வழக்கம். இறைவன் அருளுசலத்தில் மலேயாகவே தோற்றம் அளிக்கிருன். அவனைக் காணுமல் இருக்கலாமா? வழிபடாமல் இருக்கலாமா? பாடாமல் , இருக்கலாமா? அவனைப் பாடுவோம் வாருங்கள் என்று அம்மானை ஆடும் பெண்ணே அழைக்கிருர் மணிவாசகர். அண்ணு மலையானப் பாடுதுங்காண் அம்மாளுய்! திருப்பெருந்துறையில் அந்தணகை எழுந்தருளி மணி வாசகப் பெருமான ஆண்டு கொண்ட இறைவன் அவருக்குத் திருவண்ணமலையிலும் தன்:திவ்விய தரிசனத் தைக் காட்டின்ை. திருவம்மானே முழுவதும் அந்தத் திருத் தலத்தில் பாடியருளியது. • . விண் ஆளும் தேவர்க்கு.மேலாய வேதியன - மண் ஆளும் மன்னவர்க்கு மாண்பாகி கின்ருனேத் தண்ணுர் தமிழ்அளிக்கும் தண்பாண்டி நாட்டானைப் பெண் ஆளும் பாகனப் பேணு பெருந்துறையில் கண்ஆர் கழல்காட்டி நாயேன ஆட்கொண்ட அண்ணு மலையானப் பாடுதும்காண் அம்மாளுய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/98&oldid=895030" இலிருந்து மீள்விக்கப்பட்டது