பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 மு. பரமசிவம் :

இதற்குக் காரணம் என்று நினைக்கும் குந்தவி, அப்பரைச் சந்தித்து சிவனடியார் பற்றிய விவரமறிய முயற்சித்துத் தோல்வியுறுகிறாள்.

அருள்மொழியைச் சந்தித்து விவரம் கூறும் சிவனடியார், குந்தவியிடம் விக்கிரமன் காதல் கொண்டிருப்பதையும் கூறி, குந்தவியை அருள்மொழி ஆதரிக்க வேண்டு மென்கிறார். குந்தவியும், அருள்மொழியைச் சந்திக்க விரும்புகிறாள்.

வீரர்களின் சூளுரை

நரசிம்ம வர்மர் ஏற்பாட்டின்படி செண்பகத் தீவிலிருக்கும் விக்கிரமனுக்குப் பட்டத்து யானை மாலையிட அவன் குமாரபுரி அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறான். சித். இதுதான் குமாரபுரியின் அரண்மனை மகாராஜா! - விக்: என்ன சொன்னி? குமாரபுரி தானே? மாயாபுரி

அல்லவே!

சித் இல்லை அரசே, குமாரபுரிதான். கரிகாலச் சோழரின் குமாரரும், அவருடைய சந்ததி யாரும் பரம்பரை பரம்பரையாக இந்த அரண் மனையில்தான் வசித்து வந்தார்கள். தாங்களும் இதே அரண்மனையில் வசிக்க வேண்டும் என்பதுதான் இந்த நாட்டுப் பிரஜைகளின் விண்ணப்பம்.

விக்: அதிருக்கட்டும். உம்முடைய பெயர்?