பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 103

பொன்னனும், வள்ளியும், பார்த்திப மகாராஜா ஒப்படைத்த வாள், வள்ளுவன் குறள் ஓலை இரண்டும் உள்ள பெட்டியை அப்புறப்படுத்த முயற்சிக்கும்போது மாரப்பன் வருகிறான். சிவனடியார் அதற்குள் பெட்டியைப் பெற்று மறைந்து விடுகிறார். தோல்வியுற்றுத் திரும்புகிறான் மாரப்பன். அருள்மொழி ஸ்தல யாத்திரை கிளம்பி விடுகிறாள். விக்கிரமன், பெட்டியைக் கொண்டு போகவும், தாயைச் சந்திக்கவும் தமிழ் நாட்டுக்குக் கிளம்பி வருகிறான். அரசனாக அல்ல; வைர வியாபாரி தேவசேனராக.

கபால பைரவர், அருள்மொழியைக் கடத்தி வந்து விடுகிறார். அவரது சீடர்களில் ஒருவனான குள்ளன், விக்கிரமனை ரனபத்திர காளிகோயில் பக்கமாக ஏமாற்றி அழைத்து விடுகிறான். திடீரென்று காட்டுப் பாதையில் கபாலிகர்கள் தாக்குகின்றனர். அவன் அவர்களுடன் போரிடும்போது, வீரசேனன் என்பவர் வந்து காப்பாற்றி, சிற்பி ஆயனரின் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே ஆயனரின் மகள் சிவகாமியின் உருவம் கண்டு விவரம் கேட்கிறான் தேவசேனன் (விக்கிரமன்).

வீரசேனன் அது ஒரு கதை என்கிறார். பின் ஆரம்பிக்கிறார். அதற்கு முன், "மரணத்தில் நம்பிக்கை உண்டா?" என்று விக்கிரமனிடம் கேட்கிறார். தேவ: இதென்ன கேள்வி? மரணத்தில் நம்பிக்கை

யுண்டா என்றால்?