பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 மு. பரமசிவம் *

சிவ: எங்கே பொன்னா, எங்கே?

பொன் இருந்திருந்தா என்ன செஞ்சிருப்பீங்க சாமி? சிவ: அந்தக் கிராதகன் கட்டியிருப்பதாகச் சொல்லும் ரண்பத்திரக்காளி கோயிலை எப்படியாவது கண்டுபிடித்திருப்பேன். பொன் ரணபத்திர காளி கோயிலா?

சிவ: ஆமாம். அதன் தலைமைப் பூசாரி அவன். கபால ருத்ர பைரவன் என்று தன்னைச் சொல்லிக் கொள்கிறானாம்.

பொன். பேரைக் கேக்கும்போதே பயமாயிருக்குதே.

சிவ: பேர் மட்டுமன்ன? அவன் பரப்பிக் கொண்டு

வரும் மதமும் பயங்கரமான மதந்தான்.

பொன்: ஒருவேளை அந்தக் கோயில்லதான்... சிவ: மகாராணி இருக்க வேண்டும். பொன்: அய்யோ... அந்தப் பாவி...

சிவ: கவலைப்படாதே பொன்னா! கேவலம் மகாராணிக்காக இவ்வளவு சிரமம் எடுத்துக் கொண்டிருக்க மாட்டான். இதில் ஏதோ அந்தரங்க நோக்கமிருக்க வேண்டும். அந்த நோக்கம் நிறைவேறும் வரை மகாராணியை பத்திரமாகத்தான் வைத்திருக்க வேண்டும். எதற்கும் நாம் ரணபத்திர காளி கோயில் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து விட்டால் மகாராணியையும் கண்டுபிடித்துவிடலாம்.