பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

  • திரையுலகில் விந்தன் 139

1 1

1960களில் திருவனந்தபுரம் மேரிலாண்டு: சுப்பிரமணியமும் சுந்தரமும் இணைந்து சொல்லு தம்பி சொல்லு!’ என்ற படத்தைத் தயாரித்தனர். வசனம் விந்தன். இந்தப் படம் திரைக்கு வந்து போனதே தெரியவில்லை.

இதே காலகட்டத்தில் பிரபல படத்தயாரிப்பாளர் களான பத்மினி பிக்சர்ஸ் தயாரித்த 'குழந்தைகள் கண்ட குடியரசு என்ற படத்திற்கு வசனம் எழுதிய விந்தனுக்கு, பத்மினி பிக்சர்லார் ஒரு கணிசமான தொகையைக் கொடுத்தார்கள். அந்தப் பணத்தைக் கொண்டே குடியிருக்க ஒரு மனையை வாங்கினார். இதன் மூலம் விந்தன் குடும்பத்தினரும் குடியரசு கண்ட மக்கள் போல மகிழ்ந்தனர்.

அதன் கதைச் சுருக்கம்:

நாடு பூரண சுதந்திரத்தை அனுபவிக்க, குடியரசு ஆட்சி முறையை மக்களுக்கு வழங்கத் தீர்மானித்தார் மன்னர் மதிவாணன். அதை அறிந்த மந்திரிகள் தங்கள் சுகவாழ்வு பறிபோகிறதே என்று மன்னரையே அழிக்கத் திட்டமிட்டார்கள்.