பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 149

சுத்தாத இடமில்லே கேட்காத பேரில்லே சோத்துக்கு வழிகாட்ட ஆளில்லே செத்தபின்பு சிவலோகம் செல்ல வழிகாட்டும்

பித்தர்கள் ஏனிந்த நாட்டிலே? என்று தொடங்கும் இந்தப் பாடலில் விந்தன், பத்து கதைகளில் சொல்ல வேண்டிய சமூகக் கொடுமைகளை, மனித நேயமற்ற மனிதர்கள் ஏழைகள் பேரில் கடவுள் காட்டும் கஞ்சத்தனத்தைப் பின்னும் பிற சமூகச் சீர்கேடுகளைச் சாடுகிறார்.

சினிமாவில் மணிப்பிரவாள நடையில் அதாவது வடமொழி ஆங்கிலம் கலப்புடன் பாடல்கள் வந்து கொண்டிருந்த காலத்தில் எளிய தமிழில் கதைகள் எழுதி வெற்றியடைந்த விந்தன், இப்பாடலையும் எளிய தமிழில் எழுதி வெற்றி பெற்றார் என்றே சொல்லலாம்.

அன்பு, கூண்டுக்கிளி, குலேபகாவலி, பார்த்திபன் கனவு போன்ற படங்களுக்குப் பாடல்கள் எழுதிய விந்தனை, சினிமாத்துறையில் விந்தனுக்கு முன்னால் பாடல்கள் எழுதி கவி கா. மு. ஷெரீஃப், உவமைக் கவிஞர் சுரதா போன்றவர்கள் மிகவும் பாராட்டினார்கள். விந்தன் இப்படி சில பாடல்களை சினிமாவுக்கு எழுதினாலே போதும். சினிமா பாடல் ஆசிரியர்களில் விந்தன் முன்னணியில் நிறுத்தப்படுவார் என்றும் சொன்னார்கள்.

நாட்டில் அரிசிப்பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் விந்தன் 'அரிசி என்னும் தலைப்பில் குமுதம் பத்திரிகையில் கவிதை ஒன்று எழுதினார். அந்தக் கவிதைக்கு ஏராளமான பேர் வரவேற்பு.