பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 153

13

தமிழ் சினிமாவில் பத்து ஆண்டுகள் பணியாற்றிய விந்தன், கோடம்பாக்கம் படப்பிடிப்பு நிலையத்தில் படப்பிடிப்பைப் பார்ப்பதோ, நடிகை - நடிகர்களிடம் பேசிப்பொழுது போக்குவதோ எதுவும் நிகழ்ந்ததில்லை. அப்படி ஏதேனும் நிகழ்ந்திருந்தால் அது எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தாகத்தான் இருக்கும்.

அன்றைய சினிமா நட்சத்திரங்களில் குறிப்பாக சிவாஜி கணேசன், இயக்குநர் பூரீதர், ஜெயலலிதா போன்றவர்களின் செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த பிலிம் நியூஸ் ஆனந்தன் கூறுகிறார். சினிமா ஸ்டுடியோக்களிலோ, சினிமா விழாக்களிலோ, நடிகை நடிகர்களிடமோ விந்தனை நான் கண்டது இல்லை. அவரின் எழுத்தில் மதிப்புடைய நான் அவரை நேரில் கண்டதேயில்லை. அவர் எங்கோ அறையில் அமர்ந்து எழுதியதோடு சரி.

ஆனால் நடிகை - நடிகர்கள் விந்தன் பேரில் மதிப்பு வைத்திருந்தார்கள். நடிகர்கள் சந்திரபாபு, அசோகன் போன்றவர்கள் வீட்டிற்கு வருவார்கள்.