பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 161

தம் மதிப்புக்குரிய எழுத்தாளர் இளங்கோவனுக்கு சினிமா உலகம் தந்த மதிப்பை இவ்வாறு வெளிப்படுத்துகிறார் விந்தன்.

திரைப்பட நட்சத்திரமான எம்.கே.டி. பாகவதர் "ஆமாம் சாமி! என்று எதற்கும் தலையாட்டும் ஆளாக இல்லாமல் சுய சிந்தனையாளர் என்பதை இந்த நிகழ்ச்சி மூலம் காணலாம்.

"சமீபத்தில் தனிநபர் வழிபாடு கூடாது; அதனால் தேசத்துக்கும் சரி, தேச மக்களுக்கும் சரி, நன்மை யில்லை!" என்று புதிய முழக்கத்தை இந்த உலகமே அதிர முழங்கி, ரஷ்யாவில் இருந்த ஸ்டாலின் வழி பாட்டைத் தூக்கியெறிந்தார் அல்லவா குருஷ்ஷேவ். அந்தத் தனிநபர் வழிபாடு நமக்கும் உடன்பாடு இல்லை என்பதை அந்த நாளிலேயே செயலில் காட்டியவர் எம்.கே.டி. பாகவதர்.

மகாத்மா காந்தியிடம் அவர் அளவற்ற மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தது என்னமோ உண்மை தான். 'காந்தியைப் போலொரு சாந்த சொரூபனைக் காண்பது எளிதோமோ? என்று அவர் பாடியதும் என்னமோ உண்மைதான். ஆனால் அவற்றுக்காக அவர் தமக்கென்று ஒரு தனிவழி வகுத்துக் கொண்டிருந்ததை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை.

'இந்திய விடுதலைக்கு இணங்காதவரை இரண்டாவது உலக மகா யுத்தத்தில் இந்தியா பிரிட்டிஷாரோடு ஒத்துழைக்காது" என்றார் காந்திஜி. இந்திய விடுதலை வேறு; இரண்டாவது உலக மகா யுத்தம் வேறு, என்றார் பாகவதர்.