பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

©.

162 மு. பரமசிவம் :

இப்படிச் சொன்னதோடு அவர் நிற்கவில்லை. அப்போது சென்னைக் கவர்னராயிருந்த சர் ஆர்தர் ஹோப், யுத்த நிதிக்காக நீங்கள் எங்களுக்குச் சில நாடகங்கள் நடத்திக் கொடுத்து உதவ வேண்டும்' என்று கேட்டுக் கொண்டபோது, 'அதற்கென்ன நடத்திக் கொடுக்கிறேன்” என்று நடத்திக் கொடுத்தார்.

அப்போது புகழ்பெற்ற காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராய் இருந்த திரு. சத்தியமூர்த்தி சொன்னார் :

ஒய், பாகவதரே! யுத்த நிதிக்கு நீர் நாடகமா நடத்திக் கொடுக்கப் போகிறீர், நாடகம் இரும் இரும்: உம்முடைய பாகவதர் பட்டத்தையே நான் பறிமுதல் செய்து விடுகிறேன்’

அதைக்கேட்ட பாகவதர் என்ன செய்தார்? வேறொன்றும் செய்யவில்லை. சிரித்தார்.

அந்தச் சிரிப்பு அரசியல் காழ்ப்புணர்ச்சியற்ற, களங்கமில்லாத சிரிப்பு என்பதைப் பின்னர் ஒரு நிகழ்ச்சியில் அடையாளம் காட்டினார் பாகவதர்.

எம்.கே.டி. பாகவதர் நடித்த திருநீலகண்டர் வெள்ளிவிழா கொண்டாட்டத்திற்குக் காங்கிரஸ் தலைவர் எஸ். சத்தியமூர்த்தி அவர்களை அழைத்தார் பாகவதர். சத்தியமூர்த்தியும் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டு பாகவதரைப் பாராட்டிப் பேசினார்.

அன்றைய திரையுலகில் பொன்னார் மேனியனாய், புத்தம் புதிய சுடர் விளக்காய் விளங்கிய எம்.கே.டி. பாகவதரைப் பற்றி அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பைப் பெற்ற எம்.ஜி. ராமச்சந்திரன் கூறுகிறார்: