பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 15

போய்விட்டது. எனினும் கிடைத்ததைக் கொண்டு விந்தனின் சினிமா வாழ்க்கை வரலாற்றைச் சிறப்பாக எழுதியிருப்பதாக நம்புகிறேன்; படித்துப் பாருங்கள்!

இந்நூலின் கையெழுத்துப் பிரதியைப் படித்து பார்த்து முன்னுரை வழங்கிய எழுத்துச் செல்வர் வல்லிக்கண்ணன் அவர்கட்கும் தம் நினை வலைகளை எழுதிக் கொடுத்த உவமைக்கவிஞர் சுரதா அவர்கட்கும், விந்தன் வசனம் எழுதிய படங்களின் கதைச் சுருக்கத்தை வழங்கிய திரு. பிலிம் நியூஸ் ஆனந்தன் (இவர் தமிழ் சினிமாவில் அரை நூற்றாண்டு அனுபவம் மிக்கவர். தகவல் களஞ்சியம்) அவர்கட்கும் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் என்நூலை வெளியிடும் இனிய நண்பர் வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்கட்கும் மற்றும் இந்நூலாக்கத்தில் அக்கறையும் ஆர்வமும் காட்டிய தோழர்கள் அனைவருக்கும் பாராட்டும் நன்றியும்.

A.P.302, எட்டாவது பிரிவு தோழமையுள்ள 40ஆவது தெரு 影 கலைஞர் நகர் (op. zugtośPartö

சென்னை 78.