பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&

184 மு. பரமசிவம் :

பிற்சேர்க்கை

தமிழனுக்குப் பல துறைகளில் விருதும் பரிசும் கிடைக்காததற்குக் காரணம் தமிழனே; அவனுடைய குறுகிய மனப்பான்மையே!

அடுத்த மாநிலங்களில் கலை இலக்கியத் துறையில் அவர்களுக்குள் அரசியல் கருத்து வேறு பாடுகள், காழ்ப்புகள் எவ்வளவுதான் இருந்தாலும் பரிசுகள், பாராட்டுகள் என்ற வரும்போது தமது மாநிலத்து இலக்கியவாதிகளுக்கு, கலைஞனுக்குப் பரிசும் பாராட்டும் கிடைப்பதற்குப் பாடுபடு கிறார்கள். அதனால்தான் கேரளத்தில், கர்நாடகத்தில், மேற்கு வங்காளத்தில் சாகித்ய அகாதெமி, ஞானபீடம், தாதாசாகிப் போன்ற விருதும் பரிசும் பெற்றவர்கள் ஏராளமானவர்கள். ஆனால் தமிழனுக்கு ஒரே ஒரு ஞானபீடப் பரிசுதான்.

அந்த விருதைப் பெற்ற அகிலனுக்குப் பிறகு எவருக்கும் கிடைக்கவில்லை. அங்கு தான் தமிழனின் சாதிஉணர்வு, அரசியல் கருத்துக்கள், மதஉணர்வுகள் அனைத்தும் வேடம் தரித்து விளையாடுகின்றன. முடிவு? தமிழில் தரமான நாவல்கள், கதைகள், கவிதைகள், திரைப்படங்கள் இல்லை என்று இவர்களே சத்தியம் செய்து கொடுக்கிறார்கள். இப்படி இவர்களே எத்தனை ஆண்டுக்காலம் இருக்கப் போகிறார்கள்? அதுவரை தமிழ்நாட்டிற்கு, தமிழனுக்கு பரிசோ விருதோ ஒரு மண்ணும் கிடைக்காது!