பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 61

கடவுளை நம்பினேன் கற்பூரம் செலவு கல்வியை நம்பினேன் காசெல்லாம் செலவு மனிதனுக்கு மனிதன் மனமிரங்கவில்லை மானத்தோடு வாழ மார்க்கம் ஏனோ இல்லை! சாலையிலே தொழிலாளி சம்சாரம் நடக்குது ஆலையிலே அவனாவி புகையாகப் போகுது

இருபத்துநான்கு வரிகள் கொண்ட இந்த நீண்ட பாடலில் விந்தன், சமூக, சாஸ்திர, சம்பிரதாய முதலாளித்துவக் கொடுமைகள் அனைத்தையும் உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.

மேலும் விந்தன் பெரிதும் மதிக்கும் உலக எழுத்தாளர் மாக்சிம் கார்க்கியின் தாய் நாவலில் வரும்பஞ்சாலையில் உழைக்கும் தொழிலாளியின் வியர்வை ஆவியாக மாறி ஆலையில் புகையாகப் போகிறது என்னும் கருத்தை வலியுறுத்தியுள்ளார்.