பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 69

நிறையப் போடும். ஆயிரந்தடவை வந்தவையாக இருந்தாலும் பரவாயில்லை. ஆயிரத்தோராவது தடவையாக நீர் போடலாம்.

'இன்னும் ஏதேனும் வேடிக்கையாக எழுதும். வாசகர்கள் குழந்தைப் பிராயத்தில் இருப்பதால் விரும்பி படிப்பார்கள். முடிந்தால் பகுத்தறிவுப் போட்டி நடத்தும். தரித்திரம் விடுங்கித் தின்பதால் பேராசை வளர்ந்துவரும் தமிழ்நாட்டில் அதற்குப் பேராதரவு இருக்கும்.

அடிக்கும் கொள்ளையையும் சட்ட ரீதியாகவும் அடிக்கலாம்; பண்பாட்டைப் பற்றியும் பேசலாம்.

அடுத்து, இருக்கவே இருக்கிறது அரசியல். அதையும் ஒரு கை பாரும். எடுத்ததற்கெல்லாம் ஆமாம் போட்டு எழுதும். நடுநடுவே உம்மைப்பற்றியும் கொஞ்சம் பெருமையாக, சந்தேகமில்லாமல் சொல்விக் கொள்ளும்.’’

அன்றைய பத்திரிகை உலகைக் கிண்டலும் கேலியும் சேர எழுதிக் காட்டினார் விந்தன். அவரின் கொள்கைப்படியே 'மனிதன் பத்திரிகையை ஆரம்பித்து பெரும் இழப்புக்கு ஆளானதோடு சிலரின் விரோதங்களையும் அவர் தேடிக்கொண்டார்.

மனிதன் பத்திரிகை நடந்து கொண்டிருந்த போதே விந்தனுக்கு சினிமா வேலைகள் இருக்கத்தான் செய்தன. மாடர்ன் தியேட்டர்ஸ் ‘நம்பாதே’ என்ற படத்துக்கு வசனம் எழுத விந்தனை அழைத்தார்கள்.