பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தாய்...இன்று நாம் எப்படி இருந்த போதிலும் நம்முடைய மூதாதைகள் மகா வீரர்களாக இருந்திருக்கிறார்கள்.

சோழர் என்ற பெயரைக் கேட்டதுமே மாற் றரசர்கள் நடுங்கும்படியக அவர்கள் வீரச் செயல்கள் பல புரிந்திருக்கிறார்கள். அந்த நாளில் பல்லவர் என்ற பெயரே இந்தத் தென்னாட்டில் இருந்ததில்லை.

இப்போது கடல்மல்லைத் துறைமுகம் உலகமெங்கும் பிரசித்தி பெற்றிருப்பது போல அப்போது காவேரிப்பட்டினம் பிரசித்தி பெற்றிருந்தது. அந்தத் துறைமுகத்திலிருந்து பெரிய பெரிய கப்பல்கள் கிளம்பி, துரதுர தேசங்களுக்கெல்லாம் சென்று பொன்னும், மணியும் கொண்டு வந்து சோழ மன்னர்களின் பொக்கிஷத்தை நிரப்பி வந்தன.

குழந்தாய், மறுபடியும் நம் சோழநாடு அப்படிப் பட்ட மகோன்னத நிலையை அடைய வேண்டுமென்பது என் உள்ளத்தில் பொங்கும் ஆசை. இரவிலும், பகலிலும் காணும் என் லட்சியக் கனவு. அதோ அந்தச் சித்திரத்தைப் பார். என்ன கேட்கவேண்டுமோ கேள், விக்கிரமா? இனிமேல் சந்தர்ப்பம் கிடைப்பது அரிது.

ஒன்றுமில்லை அப்பா, இவ்வளவு அற்புதமாகச் சித்திரம் எழுத நீங்கள் எப்போது கற்றுக் கொண்டீர்கள்? நமது அரண்மனைச் சித்திர