பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 பிள்ளைகளைக் கண்டிப்பது பெற்றோர் தம் கடமை; அந்தக் கடமை உனக்கு உள்ளது; மடமை சாதிப்பது ஏன்? உங்களைப் போன்ற அறிஞர்கள் வாய் திறக்காமல் இருப்பதால்தான் அக்கிரமங்கள் நாட்டில் ஆக்கிரமிக்கின்றன. ஏடு எடுத்தது போதும், எழுத்தாணி அதனை எடுத்துவை கல்வி கற்ற சான்றோரே! இந்த நாட்டின் சீரழிவுகளைச் சிந்தியுங்கள் அவற்றை எடுத்துக் காட்டுங்கள் எழுத்தின் கடமை அது. கவிஞர்கள் என்று சொல்லிக் கொள்ள யார் இருக்கிறார்கள்? காவியப் புலவர் வியாசர் அங்கே அவர் காடுகளில் ஆசிரமங்களில் ஒதுங்கி வாழ்கின்றனர்.