பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 உண்டாகக் கூடாது; அமைதிக்கு வழிதேடல் அதுதான் என் உடம்பாடு' என்று தருமன் தன் கருத்து உரைத்தான் 'காடா நாடா அதுவல்ல கேள்வி நீங்கள் வீரர்களா? அடிமை செய்யும் கோழைகளா? அஞ்சி அடங்கி விட்டீர்கள் என்றால் நீங்கள் செம்மறி ஆடுகள்' என்று சூடு உண்டாக்கிக் கண்ணன் பேசினான் 'மானம் பெரிது அதற்காகப் போர் தொடுத்தல் தேவைதான் என்றாலும் உலகம் அவசரப்பட்டு விட்டீர்கள் என்று பழிச் சொல் கூறும். மறுபடியும் ஒரு முயற்சி நாடுகேள்; அதை மறுத்தால் ஐந்து ஊர் அதுவும் மறுத்தால் அடுபோர் அது முடித்துக் கொள்' என்று முடிவு கூறினான் தருமன். அடங்கி இருந்த தம்பியர் முழங்கி எழுந்தனர். வீமன் உரை நிகழ்த்தினான்.