பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 அவன் வானைப் பார்த்தான்; அவனிடம் கண்ணன் விடை பெற்றான் எட்டியிருந்து இவர்களை ஒட்டிக் கவனித்த துரியன், "அவனுக்கு இவன் ஏதோ சத்தியம் செய்து தந்தான்' என்று கருதினான். அவனை அழைத்துப் பகைத்துக் கொண்டான். 'படைத் தலைமை அவனுக்கு இல்லை' என்று நீக்கி விட்டான். கண்ணன் சூழ்ச்சிவென்றது. அடுத்தது குந்தியின் வீடு அவளைச் சந்தித்துக் "கன்னன் அவள் மகன்" என்பதை அறிவித்தான். அதிர்ச்சியுற்றாள், அவள் இருதலைக் கொள்ளி எறும்புபோல் தவித்தாள். "கன்னனைச் சந்தித்து அவனிடம் உண்மை கூறி இரண்டு வரம் கேள்' என்று சொல்லி அனுப்பினான்