பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 கிழவனுக்கா? அந்தக்கனி யாருக்கு உரிமை? வீரம் விளைவிக்க விரும்பினானே தவிரக் காதலித்து அவளைக் கைப் பற்றச் செல்லவில்லை. ஒட்டப் பந்தயத்தில் அவன் முதல் வந்தான், அதனால் கிடைத்த பரிசு அவள். அன்னைக்கு அதிர்ச்சி தர அவர்கள் விருப்பம் கொண்டனர்; "கன்னியைக் கொணர்ந்தோம்" என்று சொல்ல வேண்டியவர்கள், "கனியைக் கொணர்ந்தோம்" என்று கவிதை மொழியில் கழறினர். 'ஐவரும் கூறு போட்டுச் சமமாகப் பங்கிட்டுக் கொள்க' என்று ஆசி கூறி அழைத்தாள். வியப்பு வெளியே காத்து நின்றது: ஆரத்தி சுற்றி அழைப்பு விடுத்து அடியெடுத்து வர அவளை வரவேற்றாள், தருமன் அதைத் தடுத்து இருக்கலாம், ஆனால்