பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 இவ னப் பெற்றவர் சிறைக் கைதிகள்: அது இவனுக்கு இழிவு. ஆயர் சேரியில் இவன் வெண்ணெய் திருடினான்; கூட்டுச் சேர்ந்து கொள்ளை அடித்தான்; இளம் பெண்கள் உளம் கவர்ந்த கள்வன்; அவர்கள் பின்னலைப் பின்னால் இருந்து இழுத்தவன்; "கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ அவன் திருப்பவள வாய்தான் தித்தித்திருக்குமோ' என்று அறிவு தெரிந்த நங்கையர் ஏங்கித் தவிக்க வைத்தான். உரலில் கட்டி வைத்தால் இரு மரங்களை இழுத்துச் சாய்த்தான்; கட்டுக்கு அடங்காதவன். குளித்துக் கரை ஏறக் காத்திருந்த கன்னியரை அவர்கள் சேலைகளை ஒளித்து வைத்து அலைக்கழித்தான்.