பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவுந்தி - கதாபாத்திரம் சிலம்பில் கவுந்தியடிகள் பெறும் இடத்தினை ஆய்ந் தால் ஒரு நல்ல பாத்திரத் திறய்ைவு கிடைக்கிறது. சிவப் பதிகாரத்தில் கோவலன் கண்ணகி இருவரும் மதுரைப் பயணம் மேற்கொள்ளும் போது கவுந்தியடிகளார் கதை யில் முதலில் வரத் தொடங்குகிரு.ர். நாடுகாண் காதையில் புகார் நகரை நீங்கும் கோவல ானும் கண்ணகியும் மாடமலி மதுரை நகருக்குச் செல்லும் பொருட்டுக் காவிரியின் வடகரை வழியே சென்று கவுந்தி யடிகளாரையும் வழித் துணையாகப் பெற்று மேலே செல்லு கின்றனர். . . . . * . . . . . . . . இந்த இடத்தில் வரத் தொடங்கிய கவுந்தியடிகள் மதுரையில் புறஞ்சேரியிறுத்த காதையின்கண் இடைக்குல மடந்தை மாதரியிடம் கண்ணகியை அடைக்கலமளித்து விடும் அடைக்கலக் காதை வரை வருகிருர், ... . . . - ஏறக்குறைய ஐந்தாறு காதைகள் வரை இடம் பெறும் இந்த வழித்துணையான பெண் துறவிக் கதாபாத்திரம் இளங்கோவடிகளினல் மிக அருமையாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கிறது. - . . . ஒரு காவதத் தொலைவு கடக்கு முன்னரே, மதுரை அணித்தோ சேய்த்தோ'-என வினவும் கண்ணகிக்கு, 'ஆறைங்காவதம் அணித்தே உளது'-என மறுமொழி கூறிய கோவலன் காவிரியின் வடகரையிலுள்ள பூமரச்