பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரங்கேற்று காதையால் அறியப்படும் செய்திகள் 14 霹 "மாமலர் நெடுங்கண் மாதவி மாலை கோவலன் வாங்கிக் கூனி தன்னேடு மண மனை...-- - ಶಹ தாகிய இன் றியமையாக் கதைப்பகு தி இக்காதை, யிலேயே வருகிறது. இச்செய்தியாலும் இக்காதை சிறப் புறுகிறது. • . . . - 3. சிலப்பதிகாரம் ஒரு காலக் கருவூலம். சிலப்பதி கார்ம் நிகழ்ந்த காலத்துத் தமிழகத்தின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் நலமுற விளக்குகிற ஒர் அரிய நூல். இயல், இசை, நாடகம் என்ற மூன்றும் கலந்ததோர் முத் தமிழ்க் காப்பியம். இதன் இத்தகு சிறப்பை நன்கு விளக்குகிற காதை அரங்கேற்று காதையேயாகும். பழந்: தமிழ் இசை பற்றியும், யாழாசிரியன், குழலாசிரியன் முதலியோர் பற்றியும் அவ்வவர்தம் இசைக் கருவிகள் பற்றியும் நாடக அரங்கு பற்றியும் அதன் ஒரு முகஎழினி பொருமுக எழினி, கரந்துவரல் எழினி ஆகிய மூன்று திரைச் சீலைகள் பற்றியும் இன்னும் இன்ைேரன்ன நுணுக்க மான செய்திகளையெல்லாம் தொகுத்துத் தருவது இக் காதையே. ஒருபழந்தமிழ் நாகரிகத்தின் காலக் கண்ணுடி யாய் விளங்கும் இதன் இத்தகு சிறப்பு மிகவும் குறிக்கத் தக்க ஒன்ருகும். காதையின் பொதுவான போக்கு - தாதவில் ಗೆಅpನು மாதவி மடந்தையின் அரங்கேற். றமே காதையின் முதல் பகுதியாகும். - - - அரங்கேற்று காதையாவது கண்ணகியும் கோவல னும் இல்லறம் நிகழ்த்தி வருங்காலத்தே புகார் நகர்த்ே புகழ்மிக்க நாடகக் கணிகையாகிய மாதவி ஆடற்கலை பயின்று அரசன் முன்னிலையில் அரங்கேறிக் - செய்தியையும் அவள் ஆடலினும் பாடலினும் அழகினும்