பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமொழிகளின் தோற்றமும் வளர்ச்சியும் 47 வரலாறு 'பழமொழி எப்போது தோன்றியது என்று அறுதி யிட்டுச் சொல்ல முடியாவிட்டாலும் எப்படி எப்படி யார் யாரால் எப்போது தொகுக்கப்பட்டன என்ற வரலாற்றை ஒரளவு அறிய முடிகிறது. தமிழில் தோன்றிய முதல் பழமொழி அடிப்படையி லான வெண் பாத் தொகுப்பு நூல் என்று 'பழமொழி. நானூறு' என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நூலைச் சொல்ல வேண்டும். முன்றுறையரையனர் எழுதிய இந்: நூலில் 400 பழமொழிகளை மையமாகக் கொண்ட வெண் பாக்கள் உள்ளன. தனித்தனியே பழமொழிகள் பிரயோக மாகியுள்ள நூல்கள் என்று கணக்கிட்டால் காப்பியங்கள் சங்கப்பாடல்கள், சிறு பிரபந்தங்கள், நூலுரைகள். உரை நடை நூல்கள் எல்லாவற்றிலுமே பழமொழிகள் பயின் றுள்ளன. 1804-ல் ஜான் லாசரஸ் என்பவர் 'பழமொழி களின் அகரவரிசையும் அவற்றின் பொருட் கோட்பாடும்' என்ற நூலைத் தொகுத்து வெளியிட்டிருக்கிரு.ர். 8991 பழ. மொழிகள் இந்நூலில் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட் டிருக்கின்றன - - - 1842-ல் பர்சிவெல் பாதிரியார் 'பழமொழித். தொகுப்பு'-என்ற நூலை வெளியிட்டார். தமிழ் மொழி யைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களுடன் எந்த வசையிலாவது தொடர்புள்ள மக்களுக்கு இந்நூல் பயன் படும் என்றும்-பழமொழி எழுந்த சூழல் விளங்கும் என். றும் இத்தொகுப்பின் முன்னுரையில் கூறப்பட்டுள்ளது. ஆராய்ச்சிக்குப் பயன்படும் நூல். - بر 1888-ல் குப்புசாமிநாயுடு, கருப்பண்ணபிள்ளை என்ற இருவரும் சேர்ந்து பழமொழித் தொகுப்பு ஒன்றை வெளி யிட்டனர். இதனுள் சுமார் 3000 பழமொழிகளை அவர் கள் தொகுத்திருக்கிருர்கள். தமிழ் மக்களின் வீடுகளில் வழங்கி வரும் இப்பழமொழிகளைத் தெரிந்துகொள்ளும் ஐரோப்பியர்களும் தமிழர்களைப் போலவே பேசலாம் என்