பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமொழிகளின் தோற்றமும் வளர்ச்சியும் 49; 1952-ல் கழகப் பழமொழி அகர வரிசை' என்னும் நூல் மூலம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 10,450. பழமொழிகளை வெளியிட்டது. 1954-ல் இந்தி-ஆங்கிலம்-தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் ஒத்த கருத்துடைய 550 பழமொழிகளை திரு. வி. நந்தகோபால் என்பவர் வெளியிட்டார். 1960-ல் எஸ். கே. சாமி என்பவர் 6700 பழமொழி களை அகர வரிசைப்படி தொகுத்து வெளியிட்டார். இத். தொகுப்பில் தமிழ் நாட்டுப் பண்பாட்டுக்குப் பொருந்தாத சில பழமொழிகளும் உள்ளன என்று ஆய்வாளர்கள் கருது, கின்றனர். 1961-ல் சொல் அடிப்படையில் சுமார் 107 தலைப்புக் களில் தலைப்பு ஒன்றிற்குப் பதினைந்து வீதம் தமிழகப் பழ மொழிகளைத் தொகுத்து அளித்திருக்கிருர் திரு. கே. எஸ். லட்சுமணன். 1962-ல் தென்மொழிகள் புத்தக டிரஸ்ட் (S. L. B. T}. சென்னை அண்ணுமலைப் பல்கலைக்கழகங்களின் தமிழ்த் துறை ஒத்துழைப்போடு தென் மொழிகளில் பழமொழி கள்'-என்ற நூலை வெளியிட்டது. 1969-ல் பி. ஆர். சுப்பிரமணியம், சியாமளா பால. கிருஷ்ணன் ஆகியோரின் பழமொழி. ஆராய்ச்சி நூல்கள் வெளிவந்தன. - - - 1876-ல் பிரதாப முதலியார் சரித்திரம் (வேதநாயகம் பிள்ளை) விநோதரச மஞ்சரி (அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார்) கமலாம்பாள் சரித்திரம் (ராஜம் ஐயர்) பத்மாவதி சரித்திரம் (மாதவையா) போன்ற நாவல்களில் தமிழ்ப் பழமொழி ஆராய்ச்சிக்குப் பயன்படும் செய்திகள் நிறையக் கிடைத்தன. இனிப் பழங்காலப் பத்திரிகைகள் சிலவும் பழமொழி ஆராய்ச்சிக்குப் பெரிதும் ஒத்துழைத் தன. -