பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்துப்பாட்டு-ஒரு பார்வை 63. பெயரும் உண்டு. இரணிய முட்டத்துப் பெருங்குன்றுார்ப் பெருங்கெளசிகளுர் என்னும் புலவர் பல் குன்றக் கோட் டத்துச் செங்கண் மாத்துவேள் நன்னன்செய் நன்னனைப் பாடியது இந்நூல். மலையில் காணப்படும் பல்வகை இயற். கைப் பொருள்களும் இதில் சுட்டப்படுகின்றன. மலைக்கு யானையை உவமித்து அதன் கண் தோன்றும் அருவியை யானை மதத்துக்கு ஒப்பிடுதலால் இந்நூல் இப்பெயர் பெற். நிறது. - - இறுவாய் ஆக இதுவரை கண்டவற்ருல் பத்துப்பாட்டு என்பது தொல் தமிழக வரலாறு, பண்பாடு, கலைகள், நகரங்கள, வழக்காறுகள் பற்றி அறிய உதவும் பழங்கருவூலம் போலப் பயன்படவல்லது. சோழ பாண்டிய அரசர்களின் வரலாற். றுக் குறிப்புக்கள் கிடைக்கும் நூல் இது. ஆற்றுப்படை இலக்கியம்' என்னும் மறுபெயரால் அழைக்கும் அளவுக்கு நயம் நிறைந்தது. சங்க இலக்கிய மேற்கணக்கில் நயமும், நலமும் நிறைந்த இலக்கியம் பத்துப்பாட்டே ஆகும்.